6th Tamil Lesson Plan June 3rd Week
6th Tamil Model Lesson For June Month 3rd Week 2022.TAMIL MODEL LESSON PLAN - JUNE 3rd WEEK. 6ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு
- வகுப்பு: 6.ஆம் வகுப்பு
- பாடம்: தமிழ்
- தலைப்பு: கவிதைப்பேழை(இன்பத்தமிழ்)
- நாள் : ஜூன் 3 ஆவது வாரம் (13-06-2022 முதல் 17-02022 வரை)
அறிமுகம்:
- தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.
- மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
படித்தல்:
- செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
- ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
- தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள்
என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல். - எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
மனவரைபடம்:
இன்பத்தமிழ்
தொகுத்தலும்,வழங்குதலும்:
எங்கள் தமிழ்:
- நமது பாடப் பகுதியில் உள்ள இன்பத் தமிழ் பாடலை இயற்றியவர் பாரதிதாசன் ஆவார். அவரது இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும்.
- இவர் பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்
- இவர் புரட்சிகரமான கருத்துகளைக் கூறியதால் புரட்சிக்கவிஞர் என்றும் போற்றப் படுகிறார்.
- புரட்சிக் கவிஞர் தமிழ்மொழி பன்முகத்தன்மை கொண்ட இனிய மொழி என்கிறார்.
மதிப்பீடு:
- மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
- இன்பத் தமிழ் பாடலை இயற்றிவர் யார்?
- புரட்சிக் கவிஞரின் இயற்பெயர் என்ன?
- நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?
குறைதீர் கற்றல்:
- கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
- படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
- எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
- பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
- கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
எழுதுதல்:
- மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
- மனப்பாடப் பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.
தொடர்பணி:
- இன்பத் தமிழ் பாடலை இசையுடன் பாடி மகிழச் செய்தல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
- படவீழ்த்தி
- கணிப்பொறி
- பாடப்புத்தகம்
- கரும்பலகை