6th Tamil Notes of Lesson October 2nd week 2022

6th Tamil Notes of Lesson October 2nd week 2022

6 ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

  • நாள்        : 10-10-2022 முதல் 14-10-2022    
  • மாதம்     : அக்டோபர்         
  • வாரம்     :  இரண்டாம் வாரம்                                               
  • வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          
  •  பாடம்   :  தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.மூதுரை,  2.துன்பம் வெல்லும் கல்வி


1.கற்றல் நோக்கங்கள்   :

  •    கல்வியின் சிறப்பையும்,பயனையும் உணர்தல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •          வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • யாருக்கெல்லாம் படிப்பது பிடிக்கும்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல்  :             

  • செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம்  :





6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • கற்றவர் - மன்னன் இருவரில் கற்றவரே சிறந்தவர்.
  • கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • கற்ற கல்வியின் வழி நிற்க வேண்டும்
  • கல்வி துன்பத்தைப் போக்கக் கூடியது.

7.வலுவூட்டல்:

  • விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

  • 1.மூதுரையின் ஆசிரியர்  யார்?
  • 2தேசம் என்ற சொல்லின் பொருள் யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

  • 1.ஔவையார் இயற்றிய  நூல்கள் யாவை?
  • 2.மக்கள் கவிஞர் யார்?அவ்வாறு அழைக்கப்படக் காரணம் என்ன?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

  • 1.நீங்கள்  படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
9.குறைதீர் கற்றல்:

  • மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:

  • பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி

  • பாடப்பகுதியில் உள்ள மனப்பாடப்பாடல்களை மனப்பாடம் செய்துவரச் சொல்லுதல்
12.கற்றல் விளைவு

  • கல்வியின் சிறப்பையும்,பயனையும் உணர்தல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.