7th Tamil Notes of Lesson October 2nd Week

7th Tamil Notes of Lesson October 2nd Week

7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

  • நாள்        : 10-10-2022 முதல் 14-10-2022      
  • மாதம்       :    அக்டோபர்         
  • வாரம்     :  இரண்டாம் வாரம்                                               
  • வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          
  • பாடம்    :           தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :   1.கலங்கரை விளக்கம்
                                           2.கவின்மிகு கப்பல்
 
1.கற்றல் நோக்கங்கள்   :
 
  • சங்கப்பாடல்களைச் சீர்பிரித்துப் படிக்கும் திறனும்,புரிந்துகொள்ளும் திறனும் பெறுதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
  • வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :
 
  • யாரெல்லாம் கடற்கரைக்குச் சென்றுள்ளீர்கள்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல்  :             
 
  • செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம்  :

 

 

 

6.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • கலங்கரை விளக்கம்-தூண்
  • எட்டமுடியாத உயரம்
  • விண்ணை முட்டும் மாடம்
  • விளக்கு கப்பல்களை அழைக்கிறது.
  • உயரமான கப்பல் நீரைப்பிளந்து செல்லும்.
  • காற்று கப்பலைச் செலுத்தும்.

7.வலுவூட்டல்:

  • விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
  • 1.பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்  யார்?
  • 2.மருதத் திணை பாடுவதில் வல்லவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
 
  • 1.பத்துப்பாட்டு நூல்கள் யாவை?
  • 2.எட்டுத்தொகை நூல்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
 
  • 1.தரை வழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன் ?
 
9.குறைதீர் கற்றல்:
 
  • மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
 
10.எழுதுதல்:
 
  • பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
 
11.தொடர்பணி
 
  • பாடப்பகுதியில் உள்ள மனப்பாடப்பாடல்களை மனப்பாடம் செய்துவரச் சொல்லுதல்
 
12.கற்றல் விளைவு
  • சங்கப்பாடல்களைச் சீர்பிரித்துப் படிக்கும் திறனும்,புரிந்துகொள்ளும் திறனும் பெறுதல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.