6th Tamil Notes Of Lesson November 4th Week
6th Tamil Notes Of Lesson November 4th Week. Class 6 Tamil Notes Of Lesson for Teachers November 4th Week.
- நாள் : 21 -11-2022 முதல் 25 -11-2022
- மாதம் : நவம்பர்
- வாரம் : நான்காம் வாரம்
- வகுப்பு : ஆறாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : நானிலம் படைத்தவன்
அறிமுகம்
- அன்றாட உணவுத் தேவைக்கான பொருட்களைப் பற்றி கூறி அவற்றை பெறும் வழிகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
- ணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம்
- தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறிதல்
ஆசிரியர் குறிப்பு
- பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
- நானிலங்களை கூறல்
- நானிலங்களின் தன்மையினைக் கூறல்
- தமிழர்களின் வணிகம் பற்றிக் கூறல்
- ஏற்றுமதி, இறக்குமதி பற்றிக் கூறல்
- பொருட்களை வாங்குவதும், விற்பதும் வணிகம் என்பதனை உணர்த்துதல்
- அன்றைய வணிகத்தை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம்
நானிலம் படைத்தவன்
விளக்கம்
நானிலம் படைத்தவன்
- தமிழன் பெருநிலப்பரப்பைத் திருத்தி பண்படுத்தினான்
- ஊர்,நகரம்,நாடு உருவாக்கினான்
- நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என நால்வகைப்படுத்தினான்
- அச்சம் தரும் போர்களின் வெற்றி கண்டான்
- இமயமலையில் கொடியினை நட்டான்
- ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்
- கண்டங்கள் தோறும் வணிகம் செய்தான்
- அவன் எதற்கு அஞ்சாதவன்
- ஆசிரியர் : முடியரசன் ( துரைராசு).
- திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர்
காணொளிகள்
- விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
- பாடப்பகுதியினை வாசித்தல்
- புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
- புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்
- பாடலின் மையக் கருத்தை அறிதல்
- பண்டைய தமிழர் வணிகம் பற்றி அறிதல்
- பாடலின் நயங்களை உணர்தல்
மதிப்பீடு
LOT :
- நானிலம் பிரித்து எழுதுக.
- நிலம் என்பது யாது?
MOT :
- பண்டம் என்பது என்ன? தொடரில் அமைத்துக் கூறுக
- தமிழன் எதற்கு அஞ்சினான்?
HOT
- காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனக் கூறுக
- பண்டைய வணிகமும், இன்றைய வணிகமும் பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள்
- 614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்
- 609 – மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்
தொடர் பணி
- பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தலுக்குரிய நிலங்களை அறிந்து எழுதுக
- நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக.