7th Tamil Notes Of Lesson November 4th Week
7th Tamil Notes Of Lesson November 4th Week. Class 7 Tamil Notes Of Lesson for Teachers November 4th Week.
- நாள் : 21-11-2022 முதல் 25-11-2022
- மாதம் : நவம்பர்
- வாரம் : நான்காம் வாரம்
- வகுப்பு : ஏழாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. ஒரு வேண்டுகோள்
அறிமுகம்
- உனக்கானத் தேவையை நீ எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வாய்? நீ மற்றவர்களிடம் என்னென்ன பண்புகளை எதிர்ப்பார்ப்பாய்?
கற்பித்தல் துணைக் கருவிகள்
- கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம்
- கலைகளின் இன்றியமையாமையைக் கவிதை வாயிலாக அறிதல்
ஆசிரியர் குறிப்பு
( ஆசிரியர் செயல்பாடு )
- பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்
- கவிதையினை வாசித்தல்
- கவிதையின் மையக் கருத்தை கூறல்
- கலைகளின் நயங்களை உணர்தல்
- தாமே கவிதைப் படைக்கும் சூழலை உருவாக்கல்
- ஓவியங்களில் உயிரோட்டம் வேண்டும் எனபதனைக் கவிதை வழியாக அறிதல்
நினைவு வரைபடம்
ஒரு வேண்டுகோள்
விளக்கம் :
( தொகுத்தல் )
ஒரு வேண்டுகோள்
- கலைஉலகப் படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்
- பாறை உடைப்பவரின் சிலையில் வியர்வை நாற்றம் வேண்டும்
- உழவரின் உருவத்தில் ஈர மண்ணின் வாசம் வீச வேண்டும்
- தாயின் ஓவியத்தில் அன்பும், பாசமும் வேண்டும்
- குழந்தையின் சித்திரத்தில் பால் மணம் கமழ வேண்டும்
- இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் கலைவடிவம் பெற வேண்டும்.
- எல்லா படைப்புகளிலும் மானிடப் பண்பு அவசியம் வேண்டும்
மாணவர் செயல்பாடு :
- ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்
- கவிதையை வாசித்தல்
- புதிய சொற்களை அடையாளம் கண்டு பொருள் அறிதல்
- பாடப்பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
- கலைகளை போற்றுதல்
- ஓவியங்களில் மானுடப் பண்புகளைக் காணுதல்
மதிப்பீடு
LOT :
- வனப்பு என்பதன் பொருள் யாது?
- மிளகாய் வற்றலின் _______ தும்மலை வரவழைக்கும்
MOT
- தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை எவை?
- குழந்தைக்கான வேறு சொற்களைக் கூறுக
HOT:
- சிற்பங்களும், ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும்?
- நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகையப் படைப்புகளை உருவாக்குவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
- 702 – ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும் அக்கருத்துகளைத் தமது சொந்த கருத்துகளுடனும் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும், மாறுபடுதலையும் அறிதல்
தொடர் பணி
- பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
- உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவலை எழுதி வருக.