8th Tamil Notes Of Lesson November 4th Week

8th Tamil Notes Of Lesson November 4th Week

8th Tamil Notes Of Lesson November 4th Week. Class 8 Tamil Notes Of Lesson for Teachers November 4th Week. 

 
 

  • நாள்             :      21-11-2022 முதல் 25-11-2022       
  • மாதம்          :     நவம்பர்
  • வாரம்          :     நான்காம்  வாரம்                     
  • வகுப்பு        :     எட்டாம் வகுப்பு    
  • பாடம்          :     தமிழ்  
  • தலைப்பு  :    1. அறிவுசால் ஒளவையார், 2. வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
அறிமுகம்
  • ஒளவையார் எழுதிய நூல்களில் ஒன்றினைக் கூற வைத்து அறிமுகம் செய்தல்
  • கரும்பலகையில் சில தொடர்களை எழுதி அதன் பொருள் கூற வைத்து அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்   :
  • ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம்                                   
  • நாடகத்தைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்
  • வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்களை அறிந்து பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

  • ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
  • முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
  • புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்
  • நாடக பாங்கில் உள்ளதை மாணவர்களை வாசிக்க வைத்தல்
  • மாணவர்கள் நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்
  • வல்லினம் பற்றிக் கூறல்
  • வல்லினங்களில் எந்தெந்த எழுத்துகள் மிகும், மிகாது எனக் கூறல்
  • வல்லினத்தால் காணும் பொருள் மாறுபாடினை உணர்தல்
  • வல்லினம் மிகும்,மிகா இடங்களுக்கான விதிகளை கூறல்
கருத்து  வரைபடம்

அறிவுசால் ஒளவையார்



வல்லினம் மிகும் இடங்கள்



வல்லினம் மிகா இடங்கள்




விளக்கம்  :

( தொகுத்தல் )

அறிவுசால் ஒளவையார்

  • நாடகப்பாங்கில் மாணவர்களை வாசிக்க வைத்தல்
  • அதியமான் அரண்மனையில் ஒளவையார்
  • கரும்புக்கும் அதியமான் முன்னோருக்கும் உள்ள தொடர்பினை கூறல்
  • அதியமான் தனக்கு கிடைத்த அரிதான நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தல்
  • நெல்லிக்கனியைப் பற்றி கூறல்
  • தொண்டைமான் போர் பற்றி கூறல்
  • போரினால் காணும் இழப்பை அதியமான் கூறல்
  • தொண்டைமானிடம் தூதுதாக ஒளவை செல்லல்
வல்லினம் மிகும் இடங்கள்,

  • சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும் - அந்தப்பக்கம்
  • வினாத்திரியை அடுத்து வல்லினம் மிகும் – எந்தத்திசை?
  • இரண்டாம் வேற்றுமைத் தொடரில் வல்லினம் மிகும் - பாடத்தப்படி
  • நான்காம் வேற்றுமைத் தொடரில் வல்லினம் மிகும் – எனக்குக் கொடு
  • இகரத்தை அடுத்த வினையெச்சங்களில் வல்லினம் மிகும்
  • வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும் – படித்துப் பார்த்தார்
  • உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
  • உருவகத்தில் வல்லினம் மிகும்
  • எட்டு,பத்து எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகும்.
  • திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்
வல்லினம் மிகா இடங்கள்
  • எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
  • பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது
  • இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
  • வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

மாணவர் செயல்பாடு                     :
  • பிழையின்றி வாசித்தல்
  • புதிய வார்த்தைகளை காணுதல்
  • புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
  • நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
  • நாடகத்தில் உணர்வுகளுக்கு ஏற்ப உரையாடுதல்
  • அதியமான் கொடைத் திறம் அறிதல்
  • அதியமானின் போர் பற்றிய சிந்தனையைப் போற்றுதல்
  • வல்லினம் அறிதல்
  • வல்லினத்தில் மிகும், மிகா இடங்களை அறிதல்
  • வல்லினம் மிகும் மிகா, இடங்களை அறிந்து தொடர்களைப் பயன்படுத்துதல்
மதிப்பீடு                   

LOT :
  • அதியமான் எந்த ஊரில் ஆட்சி புரிந்தான் _______
  • வல்லின எழுத்துகள் யாவை?_______
MOT
  • அதியமானின் கொடைத்தன்மையைக் கூறுக
  • வல்லினம் மிகும் இடங்களுக்கு சான்று தருக
HOT
  • நீங்கள் இரு நாடுகளுக்கும் நடக்கும் போரினை தடுத்து நிறுத்த எவ்வாறு உதவுவீர்கள்?
  • வல்லினம் இட்டும், இடாமலும் சொற்களை எழுதுவதில் காணும் விளைவுகளைக் கூறுக
கற்றல் விளைவுகள்

அறிவுசால் ஒளவையார்

  • 807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது நுட்பமாக ஆய்வு செய்து குறிப்பிட்ட சிலவற்றைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்
வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்

  • 816  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி
  • மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக
  • சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களின் பட்டியல் எழுதி வருக
  • பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ல வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிந்து எழுதி வருக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.