9th Tamil Notes Of Lesson November 4th Week

9th Tamil Notes Of Lesson November 4th Week

9th Tamil Notes Of Lesson November 4th Week. Class 9th Tamil Notes Of Lesson for Teachers November 4th Week. 

 

  • நாள்               :           21-11-2022 முதல் 25-11-2022       
  • மாதம்           :           நவம்பர்
  • வாரம்           :             நான்காம்   வாரம்                     
  • வகுப்பு          :           ஒன்பதாம் வகுப்பு    
  • பாடம்            :           தமிழ்  
  • தலைப்பு      :             1. சந்தை, 2. ஆகுபெயர்


அறிமுகம்
  • உங்கள் ஊரில் உள்ள சந்தைப் பற்றி கூறுக
  • தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள்
தமிழரசி வள்ளுவரைப் பார்த்தாள் – இரண்டுத் தொடர்களின் பொருள் வேறுபாட்டினைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்     :

  • ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, வில்லு இசைக் கருவி, பானை
நோக்கம்                            :
  • பல்வேறு நூல்களைப் படித்து, ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்துக் கூறும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
  • மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதனைக் கண்டறிதல்
ஆசிரியர் குறிப்பு          :                                    
  • பல்லங்காடி என்பதனை அறிதல்
  • நாளங்காடி, அல்லங்காடி என்பதனை அறிதல்
  • பண்டமாற்று முறை பற்றிக் கூறுதல்
  • சந்தையின் தன்மையினைம கூறல்
  • அன்றைய சந்தையும், இன்றைய வணிக வளாங்களையும் ஒப்பிடல்
  • ஆகுபெயர் என்பதனைப் பற்றிக் கூறல்
  • ஆகுபெயரின் வகைகளைப் பற்றிக் கூறல்
  • ஆகுபெயருக்கு நடைமுறை உதாரணங்களைக் கூறல்
கருத்து  வரைபடம்                 :
சந்தை

 


ஆகுபெயர்

விளக்கம்        :
( தொகுத்தல் )

சந்தை

அனைத்துப் பொருட்களுக்கும் விற்கும் அங்காடி பல்லங்காடி
பகலில் செயல்படும் அங்காடி – நாளங்காடி
இரவில் செயல்படும் அங்காடி - அல்லங்காடி
பண்ட மாற்று முறை – பண்டம் கொடுத்து பண்டம் பெறுவது
சந்தை – வார சந்தை , மாத சந்தை
 
                                                 ஆகுபெயர்
ஒன்றன் இயற்பெயர் மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்
ஆகுபெயர் – 16 வகைகள்
பொருளாகு பெயர் – முதற்பொருளுக்கு ஆகிருவது
இடவாகு பெயர் – இடத்திற்கு ஆகி வருவது
காலவாகு பெயர் – காலத்திற்கு ஆகி வருவது
சினையாகு பெயர் – உறுப்புக்கு ஆகி வருகிறது
பண்பாகு பெயர் – பண்புக்கு ஆகி வருவது
தொழிலாகு பெயர் – தொழிலுக்கு ஆகி வருவது
கருவியாகு பெயர் – காரியத்திற்கு ஆகி வருவது
காரியவாகு பெயர் – கருவிக்கு ஆகி வருவது
கருத்தவாகு பெயர் – கருத்தாவின் பெயர் இயற்றவருக்கு ஆகி வருவது
எண்ணலளவை ஆகுபெயர் – எண்கள் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது
எடுத்தலளவை ஆகுபெயர் – அளவை பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருவது
முகத்தலளவை ஆகு பெயர் - அளவை பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருவது
நீட்டலளவை ஆகுபெயர் - அளவை பெயர் அதன் பொருளுக்கு ஆகி வருவது


மாணவர் செயல்பாடு:
  • விரிவானப் பகுதியினை வாசித்தல்
  • நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்
  • புதிய சொற்களை அறிந்து வாசித்தல்
  • விரிவானப் பகுதியின் மையக் கருத்தினை அறிதல்
  • விரிவானப் பகுதியினை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
  • ஆகுபெயர் என்பதனை அறிதல்
  • ஆகுபெயரின் வகைகளை அறிதல்
  • ஆகுபெயரின் உதாரணங்களை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு

LOT :
  • பல்லங்காடி என்பது யாது?
  • ஆகுபெயர் என்றால் என்ன?
MOT
  • நாளங்காடி, அல்லங்காடி பற்றிக் கூறுக
  • பட்டப் பெயர்கள் ஆகுபெயர் ஆகுமா?
HOT
  • வணிகம் சார்ந்த பழமொழி, தொடர்களை கூறுக
  • தற்காலத்தில் ஆகுபெயரை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?
கற்றல் விளைவுகள்:
  • ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்து உரையாடலாக/கலந்துரையாடலாக வெளிப்படுத்துதல்
  • மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கையாளுதல்
தொடர் பணி:
  • புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.