தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் ? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவலால் தமிழகத்தில் முன்னதாகவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா(எச்3என்2) தொற்று அண்மை காலமாக வேகமாக பரவி வருகிறது. பருவ காலங்களில் அதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

தமிழகத்திலும் அண்மை காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 10 நாள்கள் முன்னதாகவே முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, ஏப்ரல் 27-ஆம் தேதி தேர்வுகள் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பொதுத் தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் ஏப்ரல் 17 முதல் 24 வரை தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.

வைரஸ் காய்ச்சல் மற்றும் கோடை வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.