சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு.
sainik school entrance exam 2024 |
sainik school entrance exam 2024
சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாகடிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.
கட்டண விவரம்: இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங் களை என்டிஏ வலைதளத்தில் (www.nta.ac.in) சென்று அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.