'குதிரை பேரம்' எப்படி வந்தது தெரியுமா?
தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் ‘குதிரை பேரம்' என்ற வார்த்தை செய்திகளை ஆக்கிரமிக்கும். 17ஆம் நூற்றாண்டு வரையிலும் விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்ட குதிரை வர்த்தகத்தை மையமாக வைத்து இது தோன்றியது. பொதுவாக குதிரை பேரம் என்பதில் நியாயம் என்பது எல்லாம் இருக்காது. விற்பவர், வாங்குபவர் இருவருமே ஏமாற்றுக்காரர்களாக இருப்பார்கள். அரசியலில் இது ஒத்துப்போவதால் இப்பெயர் நிலைத்துவிட்டது.