பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.!

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.!



ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி) முடிவடைந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, வெயில் போன்ற காரணங்களால் பள்ளித் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் அவர் கூறிஉள்ளார்.

இதே நாளில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தனியார் பள்ளிகளில் 1-9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.