55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.