கலைத்திருவிழா " - 2025-26 மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கான புத்தொளி நடத்துதல் பெற்ற பயிற்சி முகாம்
பள்ளி மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும் . நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும் 2022 -23 ஆம் ஆண்டு முதல் பள்ளி . வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாவணவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்தும் விதமாகவும் , அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும் , அவர்கள் மென்மேலும் கலை வடிவங்களில் சிறந்து விளங்குவதற்கான அவரவர்தம் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கக்தில் , அந்தந்த கலைப்பிரிவின் வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு புத்தொளி பயிற்சி முகாம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.