IPL 2025 சென்னை அணியின் கேப்டனாக தோனி அறிவிப்பு..! காயம் காரணமாக ருதுராஜ் விலகல்
தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூழலில் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ள நிலையில் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை அணி நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி கடந்த 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூழலில் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த அறிவிப்பு சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி பொறுப்பேற்றதற்கு பின்னர் முதல் போட்டியாக நாளை கொல்கத்தா அணியை சென்னை எதிர்கொள்கிறது.